காஷ்மீரில் அதிரடி தாக்குதலை ஆரம்பித்தது பாதுகாப்பு படை.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இந்த வார தொடக்கத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இங்கு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. விரைவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதற்காக ஐபிஎஸ் அதிகாரிகளையும், ராணுவ வீரர்களையும், ஆளுநருக்கு அறிவுரை வழங்க நியமித்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரவில் இருந்து சிறப்பு கமாண்டோ படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களிலும், போர் காலங்களிலும் சிறப்பு தாக்குதல் நடத்த இந்த படை வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
ஸ்னைப்பர் துப்பாக்கி, ரேடார் கருவிகளுடன் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லை பகுதியில் கூடுதல் வீரர்களை நிறுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்றும் நிறைய வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன் மலை பகுதிகளில் ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இன்னும் தாக்குதல் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications