பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கயா: பீகார் மாநிலம் கயாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கயா அருகே அப்கோலா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அப்கோலா கிராமத் தலைவர் உட்பட 3 பேர் பலியாகினர்.
மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications