சிஆர்பிஎப் வீரர் வீட்டை குண்டு வைத்துத் தகர்த்த நக்ஸல்கள்.. யாரும் காயமில்லை!
ஒளரங்காபாத், பீகார்: பீகார் மாநிலம் ஒளரங்காபாத் நகரில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரின் வீட்டை நக்சலைட்கள் குண்டு வீசித் தாக்கினர். இதில் வீடு சேதமடைந்தது. இருப்பினும் இதில் யாரும் காயமடையவில்லை.

குடும்பா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று இரவு 11.30 மணியளவில் 24க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கி நக்சலைடகள் அங்கு வந்தனர். அங்குள்ள சிஆர்பிஎப் வீரர் வினோத் குமாரின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றினர். அதன் பின்னர் வீட்டை குண்டு வீசித் தகர்த்தனர்.

சம்பவம் நடந்தபோது வீட்டில் வினோத் குமார் இல்லை. பின்னர் ஒரு துண்டுப் பிரசுரத்தை அங்கு போட்டு விட்டு நக்சலைட்கள் போய் விட்டனர். அதில், இதை விட மோசமான சம்பவங்கள் தொடரும் என்று எழுதப்பட்டிருந்தது.

ஒளரங்கபாத் நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு நக்சலைட் வேட்டையில் பல்வேறு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதில் சிஆர்பிஎப்பும் ஒன்றாகும். எனவேதான் சிஆர்பிஎப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இப்படி வீட்டை மட்டும் தகர்த்து விட்டு நக்சலைட்கள் போயிருப்பதாக கருதப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications