“மன்மோகன் சிங்” துணிச்சல்.. உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்களை உயிரை பணயம் வைத்து மீட்ட வீரர்
டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை தன்னுடைய உயிரை பணயம் வைத்து மீட்டு வந்த தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர் மன்மோகன் சிங், தன்னுடைய உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடந்த 12 ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து சுரங்கத்தை விட்டு வெளியேறும் வழிகள் அடைபட்டன. இதனால் கடந்த 17 நாட்களாக தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கி உயிருக்கு போராடினர். தொழிலாளர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என ஏராளமான வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இவர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க மீட்பு நிபுணர்கள் என பல்வேறு குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடக்கத்தில் கிடைமட்டமாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. ஆகர் என்ற இயந்திரத்தின் மூலமாக இந்த துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், சுரங்கத்தில் இருந்த கான்கிரிட் கம்பிகளில் அகர் இயந்திரத்தின் பிளேடுகள் பட்டு உடைந்தன. அந்த பிளேடுகளும் இரும்பு கம்பிகள், கம்பி வலைகள் இயந்திரத்தின் பிளேடுகளுடன் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் மீட்புப் பணி தாமதமானது.
அவற்றை மீட்புப்பணியில் உள்ள வீரர்களை அனுப்பி சிறிய இயந்திரங்களை கொண்டு அகற்ற முடிவு செய்தனர். அந்த பணியிலும் தடங்கல்கள் ஏற்பட்டதை அடுத்து மாற்று வழிகளில் மீட்புப் படையினர் தொழிலாளர்களை மீட்க முடிவு செய்தனர். அதன்படி செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்யப்பட்டு அந்த பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் துரிதமாக நடைபெற்ற நிலையில், நேற்று எலி வளை மூலம் சுரங்கம் தோண்டப்பட்டு மீட்புப் படையினர் சுரங்கத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்களை ஒவ்வொருவராக அழைத்து வந்தனர்.
17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது தேசத்தையே நிம்மதி அடைய செய்து இருக்கிறது. இந்த நிலையில் தனது உயிரை பணயம் வைத்து சுரங்கத்திற்குள் இறங்கி தொழிலாளர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களில் ஒருவரான மன்மோகன் சிங் தன்னுடைய அனுபவத்தையும் உணர்வையும் வெளிப்படுத்தி உள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில், "நான் அந்த சுரங்கத்தை அடைந்த அந்த தருணத்தில் 41 தொழிலாளர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று தொடர்ந்து நம்பிக்கை அளித்துக்கொண்டே இருந்தோம். அவர்களின் மன நிலையை திடமாக வைத்திருக்க முயற்சித்தோம்." என்றார்.
-
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள்












Click it and Unblock the Notifications