எக்ஸிட் போல் உண்மையானால் தேசிய அளவில் 3வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுக்கும்!
டெல்லி: தேசிய அளவில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்ததாக அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்கின்றது என்.டி.டி.வி/ எக்ஸிட் போல்.
லோக்சபா தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தன. அதே நேரத்தில் தேசிய அளவில் அதிமுக 4வது இடத்தில் இருக்கும் என்றும் கூறின.

32 தொகுதிகளுடன் 3 வது இடத்தில் அதிமுக
ஆனால் நேற்று வெளியிடப்பட்ட என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய அளவில் 3வது இடத்தை அண்ணா அதிமுக பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் 9 தான்
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 9 இடங்களைத்தான் அதிமுக பெற்றிருந்தது. தற்போது அதைவிட கூடுதலாக 23 இடங்களைப் பெற்று 3வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்கிறது என்.டி.டி.வி. எக்ஸிட் போல்.

திரிணாமுல் பின்னடைவு
3வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் 30 இடங்களைத்தான் மேற்கு வங்கத்தில் கைப்பற்றி 4வது இடத்துக்கு நகர்ந்திருப்பதாகவும் என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

மாநிலக் கட்சிகளும் என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவுகளும்
அதிமுக - 32 ; திரிணாமுல் காங்கிரஸ் - 30 ; சிவசேனா - 15 ; பிஜூ ஜனதா தளம் - 13 ; தெலுங்கு தேசம் - 12; சமாஜ்வாடி கட்சி - 12; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - 12 ; தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 11; ராஷ்டிரிய ஜனதா தளம் - 10 இடங்களைக் கைப்பற்றுமாம்.

திமுக நிலை?
திமுகவைப் பொறுத்தவரையில் 5 இடங்களைத்தான் பெறும் என்பதால் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications