வரலாறு காணாத வெள்ளம்... கேரளத்தில் ரூ. 8,000 கோடி சேதம்
கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதல் முகாம்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வீடு, வாசல்களை இழந்தவர்களின் கைகளில் ஒரு காசு கூட இல்லாததால் மிகவும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் இதுவரை 37 பேர் பலியாகிவிட்டனர். 1500 வீடுகள் சேதமடைந்துள்ளன.
வெள்ள பாதிப்புக்கு உடனடியாக ரூ.400 கோடி வழங்க வேண்டும் என்றும் கேரளத்தில் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications