ஃபனி புயலால் சின்னாபின்னமான ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil
புவனேஷ்வர்: ஃபனி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் நேற்று ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இது பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதில் கல்வி நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒடிசாவில் நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்தது.
ஒடிசா அரசின் கோரிக்கையை ஏற்ற தேசிய தேர்வு முகமை ஒடிசாவில் நீட் தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications