For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாளத்திற்கு உதவ 'ஆபேரஷன் மைத்ரி'யை துவங்கிய இந்தியா

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் பணிக்கு ஆபரேஷன் மைத்ரி என்று இந்திய ராணுவம் பெயரிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனைத்து உதவியும் செய்ய இந்தியா முன் வந்துள்ளது. நேபாள மக்களின் கண்ணீரை துடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Nepal earthquake: India's aid to Nepal named 'Operation Maitri'

நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இது தவிர இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நேபாளத்திற்கு மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பியது, அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது.

Nepal earthquake: India's aid to Nepal named 'Operation Maitri'

நேபாளத்திற்கு செய்யும் உதவி பணிக்கு ஆபரேஷன் மைத்ரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இன்று மதியம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

Nepal earthquake: India's aid to Nepal named 'Operation Maitri'

ஏற்கனவே பீதியில் இருந்த நேபாள மக்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் நில அதிர்வுகளால் மேலும் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 72 மணிநேரத்திற்கு நில அதிர்வுகள் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Indian Army has named the aid to Nepal 'Operation Maitri' or friendship, a day after it started extending help to the neighbouring country that was hit by a massive earthquake just before noon on Saturday, leaving a trail of death and destruction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X