கிரிமினல் அரசியல்வாதிகள் 13 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை: மத்திய அரசு அதிரடி முடிவு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கிரிமினல் அரசியல்வாதிகள் 13 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்துள்ளது.
கிரிமினல் அரசியல்வாதிகளை அமைச்சரவையில் சேர்க்கவே கூடாது என்று பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு உச்சநீதிமன்றம் நேற்று மறைமுகமாக அறிவுறுத்தல் விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து கிரிமினல் அரசியல்வாதிகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வது என மோடி அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எப்படியெல்லா சட்ட திருத்தம் கொண்டுவரலாம் என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு உத்தேசித்து வரும் திருத்தங்கள்:
- எந்த ஒரு குற்றத்துக்காகவும் 7 ஆண்டுக்கும் மேல் சிறைத் தண்டனை பெறுகிற நபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
- 7 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த பின்னரும் மேலும் 6 ஆண்டுகளுக்கும் அந்த நபர் தேர்தலில் போட்டியிட இயலாது.
- ஒருநபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் வேட்பாளர்கள் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
- தேர்தல் ஆணையத்திடம் பொய்யான சொத்து மதிப்பை தாக்கல் செய்யபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த வேட்பாளரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
- பொய்யான சொத்து விவரங்களை அளிப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications