மகராஷ்டிராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்பு– பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
மும்பை: மகராஷ்டிராவில் நாளை புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மகராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.
அங்கு, கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தனித்து ஆட்சி அமைக்க முடிவு:
இதனால், தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்ததை தொடர்ந்து பாஜக தனித்து ஆட்சி அமைத்து விட்டு பின்னர் சட்டசபையில் தன்னுடைய பலத்தினை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.

புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்:
மும்பையில் நேற்று முன்தினம் நடந்த பாஜக புதிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர மாநில புதிய முதல்வராக அக்கட்சியின் மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

முதலாவது முதல்வர்:
முதன்முதலில் மகராஷ்டிராவில் பாஜகவிற்கு கிடைத்துள்ள வெற்றியால் பாஜகவின் சார்பில் இவர் மகாராஷ்டிராவின் "முதல்" முதல்வராக பதவியேற்க உள்ளார்.

நாளை பதவியேற்பு விழா:
இதனை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நாளை அவர் பதவி ஏற்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக பாஜக இந்த விழாவினைக் கொண்டாட உள்ளது.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு:
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பாதுகாப்பு பணியில் போலீசார்:
இதனையடுத்து வான்கடே மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிட்டதட்ட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications