மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை- இந்திய பொது கல்வி முறை மீதான படுகொலை: சோனியா காந்தி
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புதிய கல்வி கொள்கையானது இந்திய பொது கல்வி முறை மீதான படுகொலை என மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் புதிய கல்வி கொள்கையானது அதிகாரக் குவிப்பு, மதவாத திணிப்பு மற்றும் தனியார்மயமாக்குவது என்பதை அடிப்படையாக கொண்டிருப்பதாகவும் சோனியா காந்தி விளாசியுள்ளார்.
தி இந்து நாளேட்டில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக சோனியா காந்தி எழுதிய கட்டுரையில் இடம் பெற்றிருப்பதாவது: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையானது 3 முக்கிய திட்டங்களைக் கொண்டது. "Centralisation of power, Commercialisation, Communalisation" என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை. மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து மத்தியில் குவித்து வைப்பது, மதவாத கருத்துகளை திணிப்பது, கல்வித் துறையில் தனியாரை களமிறக்குவதாகவே மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை இருக்கிறது.

மத்திய அரசு நிதி உதவி நிறுத்தம்
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் SSA திட்டத்தின் கீழ் மாநிலங்கள் பல ஆண்டுகளாக நிதி உதவி பெற்று வந்தன. ஆனால் தற்போது பிஎம்ஶ்ரீ திட்டத்தை செயல்படுத்தவில்லை என கூறி மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கக் கூடிய நிதி உதவியை நிறுத்தி வைத்திருக்கிறது. இத்தனைக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூட SSA திட்டத்துக்கான நிதியை எந்த நிபந்தனையுமே இல்லாமல் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இருக்கிறது.
உயர் கல்வியிலும் மாநில அரசின் அதிகாரம் பறிப்பு
இதேபோல உயர்கல்வித் துறையிலும் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில், மாநிலத்தின் பங்களிப்பையே இல்லாமல் செய்திருக்கிறது யுஜிசியின் வரைவு அறிக்கை. மாநிலங்களின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநர்களே தன்னிச்சையாக நியமிக்கலாம் என்ற இந்த யுஜிசியின் வரைவு அறிக்கையானது உண்மையிலேயே கூட்டாட்சி தத்துவத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும்.
அரசு பள்ளிகள் மூடல்
புதிய கல்விக் கொள்கையானது, அனைவருக்குமான கல்வி உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதுடன் கல்வித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் 2014-ம் ஆண்டு முதல் சுமார் 90,000 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கின்றன.
பாடப் புத்தகங்களில் மாற்றம்
மேலும் மத்திய பாஜக அரசானது, கல்வியிலும் வெறுப்பரசியலை திணிக்கிறது. NCERT பாடப் புத்தகங்களில் இருந்து மகாத்மா காந்தி படுகொலையை நீக்கியது, முகலாயர்கள் வரலாற்றை நீக்கியது உள்ளிட்டவைகளைக் குறிப்பிடலாம்.
கல்வி முறை மீதான படுகொலை முடிவுக்கு வர வேண்டும்
கல்வி நிறுவனங்களில் நியமனங்கள் என்பதே ஒரு சித்தாந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதுதான் இதற்கு காரணமாகும். கல்வி முறையில் மாநில அரசுகளை ஒதுக்குகிற போக்கும் மிக ஆபத்தானது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகள், இந்திய பொதுக் கல்வி முறை மீதான அப்பட்டமான படுகொலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி எழுதியுள்ளார்.
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications