For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருண்ஜெட்லியிடம் உள்ள பாதுகாப்பு துறைக்கு விரைவில் புதிய அமைச்சர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக அருண் ஜேட்லி தொடர்ந்து பதவிவகிக்கப்போவதில்லை, முக்கியம்வாய்ந்த அந்த துறை வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட உள்ளது.

மோடி தலைமையிலான அமைச்சரவையில், அருண்ஜேட்லி, நிதி அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகிய துறைகளை வகிக்கிறார். தனது அமைச்சக பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பிறகு நிருபர்களிடம் பேசிய ஜேட்லி, "பாதுகாப்புத்துறை என்பது எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் துறை அவ்வளவுதான். நிதி மற்றும் பாதுகாப்புத்துறை இரண்டுமே மிகவும் முக்கியமானது என்பதால் ஒருவரே நிர்வகிப்பது சிரமம். இன்னும் இரு வாரங்களில் பாதுகாப்புத்துறைக்கு அமைச்சர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

New minister for defence in a few weeks

ராணுவ தளபதியை பாஜக விமர்சனம் செய்யவில்லை. தேர்தல் நடத்தை விதிமீறல் அமலில் இருக்கும்போது, அவசரகதியில் சுகாக் ராணுவ தளபதியாக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட விதத்தைதான் எதிர்த்தோம். எனவே அரசுக்கும், ராணுவ தளபதிக்கும் எந்த தனிப்பட்ட மோதலும் கிடையாது.

கடந்த பல ஆண்டுகளாக ராணுவத்துக்கு நவீன வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை. ராணுவத்தினருக்கு முழு ஒத்துழைப்பும், வசதியும் செய்து தருவது இந்த அரசின் முதல் நோக்கமாக இருக்கும். இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.

English summary
The Narendra Modi government will soon appoint a full-time Defence minister. This, in short, was finance minister Arun Jaitley's message after taking charge of the gargantuan defence ministry. "MoD is only an additional charge till alternative arrangements are made with the full expansion of the council of ministers. This is a very important ministry and should hopefully get a ministerial head over the next couple of weeks to look full-time after it," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X