பஞ்சாப் அமைச்சரவை இன்று பதவியேற்பு.. ஒரு பெண் உள்பட 10 பேர் அமைச்சர்களாகிறார்கள்!
அமிருதசரஸ்: பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை வென்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இதையடுத்து ஏற்கெனவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த 16ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்ளாமல் அவர் சுதந்திர போராட்ட தியாகி பகத் சிங்கின் சொந்த ஊரான கட்கார் காலனில் பதவியேற்றார்.

இதற்கு அடுத்த நாளே எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் டாக்டர் இந்தர்பிர் சிங் நிஜ்ஜார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பஞ்சாப் அமைச்சரவை பதவியேற்கிறது. 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். அவர்களில் ஒருவர் பெண். சண்டீகரில் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதையடுத்து புதிய அமைச்சரவை கூட்டம் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் இன்று பகல் 12.30 மணிக்கு கூடுகிறது. இதுகுறித்து முதல்வர் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்போருக்கு எனது வாழ்த்துகள்.
மாநிலத்தின் மக்களுக்காக இந்த அமைச்சரவை கடுமையாக பணியாற்ற வேண்டும். பஞ்சாபில் நேர்மையான அரசு நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவோம் என உறுதியேற்க வேண்டும் என கூறிய மான், 10 அமைச்சர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
இன்று பதவியேற்கும் அமைச்சர்கள்
1. ஹர்பால் சிங் சீமா
2.டாக்டர் பல்ஜித் கவுர் (பெண் அமைச்சர்)
3.ஹர்பஜன் சிங் ஈடிஓ
4.டாக்டர் விஜய் சிங்லா
5.லால் சந்த் கடாருச்சக்
6.குர்மீத் சிங் மீட் ஹாயர்
7.குல்தீ சிங் தலிவால்
8.லால்ஜித் சிங் புல்லர்
9.பிராம் சங்கர் (ஜிம்பா)
10.ஹர்ஜோத் சிங் பைன்ஸ்












Click it and Unblock the Notifications