ரூ. 20 லட்சத்துக்கு மேல கைல ஒரு பைசா இருக்கப்படாது.. மோடியின் அடுத்த அட்டாக்?
கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக கையிருப்பு ரொக்கம் ரூ. 20 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து அனைவரையும் அதிர வைத்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி அடுத்து மேலும் ஒரு அதிரடிக்குத் தயாராகி வருவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
அது, ரூ. 20 லட்சத்திற்கு மேல் கையில் ரொக்கமாக வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது சட்டவிரோதமாக அறிவிக்கப்படும் என்ற திட்டம்தான்.
500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு முதல் கட்டம்தான் என்றும் கருப்புப் பணம் ஒழிப்புதொடர்பாக மோடி மேலும் பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

அடுத்தடுத்து அதிரடி
அடுத்தடுத்து தனது திட்டங்களை மோடி அமல்படுத்தவுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். முதல் கட்டமாகத்தான் ரூபாய் நோட்டு ஒழிப்பை அவர் அமல்படுத்தியுள்ளார்.

கையில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் கூடாது
மோடி வைத்துள்ள அடுத்த திட்டமாக கூறப்படுவது என்னவென்றால் ரொக்கக் கையிருப்பு ரூ. 20 லட்சம் வரைதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் போனால் அதை சட்ட விரோத செயலாக அறிவிக்க மோடி திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

பிளாஸ்டிக் பணம்
இதுதவிர தற்போது உள்ள காகித கரன்சியை ஒழித்து விட்டு பிளாஸ்டிக் கரன்சிக்கு மாறும் திட்டத்தையும் மோடி கையில் வைத்துள்ளாராம்.

தீவிரம்
கருப்புப் பணத்தை ஒழிப்பதில் மோடி தீவிரமாக இருப்பதாகவும், ஒவ்வொரு திட்டமாக அவர் அடுத்தடுத்து அமல்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. கருப்புப் பண ஒழிப்பில் மக்கள் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications