விதைத்தது விளைகிறது- திரிபுரா பாஜக அரசு கவிழ்கிறது? 9 எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்.-க்கு தாவல்?
அகர்தலா: திரிபுராவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 9 எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவக் கூடும் என்பதால் அம்மாநில அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூத்த தலைவர்களை பாஜக மேலிடம் திரிபுராவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
திரிபுரா மாநிலம் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதாவால் காலூன்றவே முடியாத நிலைதான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட திரிபுராவில் பாஜக வெல்லவில்லை.
ஆனால் 2018 தேர்தலுக்கு முன்பாக பாஜக நடத்திய வழக்கமான சித்து விளையாட்டுகள் நாட்டையே அதிரவைத்தன. 2017-ம் ஆண்டில் கொத்து கொத்தாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தம் பக்கம் இழுத்தது பாஜக. இதனால் திரிபுரா சட்டசபையில் பாஜகவுக்கும் எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.

காங் கட்சியை விழுங்கிய பாஜக
2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையே கபளீகரம் செய்தது பாஜக. 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவிய 40க்கும் அதிகமான மாஜி எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுத்து போட்டியிட வைத்தது. இதனால் 2018 தேர்தலில் பாஜக 35 இடங்களில் வெல்ல முடிந்தது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 8 இடங்களில் வென்றது. இப்படித்தான் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைத்தது.

9 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
இப்போது திரிபுராவில் பாஜகவின் முதல்வர் பிப்லாப் குமார் தேவ்-க்கு எதிராக சுப்திராய் பர்மன் தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் திரிபுராவில் பாஜகவுக்கு அடையாளம் கொடுத்த மாஜி காங்கிரஸ் கட்சியினர்தான். இந்த 9 பேரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முகுல் ராய் விளையாட்டு
திரிபுராவின் இந்த அரசியல் குழப்பத்துக்கு காரணம் முகுல் ராய்தான். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் முதுபெரும் தலைவராக இருந்தவர் முகுல் ராய். இவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக வளைத்து போட்டது. அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவுக்காக முகுல் ராய் தீவிரமாக பணியாற்றினார். ஆனால் மேற்கு வங்க வாக்காளர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளவில்லை. மமதா பானர்ஜியே மீண்டும் முதல்வராகிவிட்டார்.

மே.வங்கத்திலும் பாஜகவுக்கு நெருக்கடி
இதனால் மேற்கு வங்கத்தில் பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பி வருகின்றனர். அத்துடன் 24 பாஜக எம்.எல்.ஏக்களும் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ உள்ளனர். மேற்கு வங்கத்தில் பாஜகவை இப்படி அதிரவைத்துக் கொண்டிருப்பவர் சாட்சாத் முகுல்ராய்தான். இவர்தான் இப்போது திரிபுராவிலும் பாஜகவை ஒரு கை பார்ப்பது என கோதாவில் குதித்து எம்.எல்.ஏக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இழுத்து வருகிறாராம்.

திரிபுராவில் தலைவர்கள் முகாம்
திரிபுராவில் ஆளும் பாஜக அரசு கவிழ்ந்துவிடும் என அச்சப்படுகிறது டெல்லி பாஜக மேலிடம். இதனையடுத்து பாஜக மூத்த தலைவர்களை திரிபுராவுக்கு அனுப்பி உள்ளது டெல்லி மேலிடம். அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த சமாதான முயற்சி கை கொடுக்காது; திரிபுரா பாஜக அரசு எந்த நேரத்திலும் கவிழும் என்கின்றனர் அம்மாநில மூத்த பத்திரிகையாளர்கள்.
எதை விதைக்கிறோமோ அதுவே விளையும்!
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications