மேற்கிந்திய தீவுகளுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி.. அங்கு செல்லவும் காரணம் இருக்கு மக்களே!
நீரவ் மோடி மேற்கிந்திய தீவுகளுக்கு தப்பி சென்று இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: நீரவ் மோடி மேற்கிந்திய தீவுகளுக்கு தப்பி சென்று இருக்கிறார். இவர் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

செயின்ட் கீட்ஸ் தீவு
மேற்கு இந்திய தீவுகளில் இந்த தீவு இருக்கிறது. இதன் பெயர் செயின்ட் கீட்ஸ். இங்குதான் தற்போது இவர் குடியேற இருக்கிறார். ஏற்கனவே இதற்கான ஏற்பாடுகளை இவர் பார்த்து வைத்து இருக்கிறார். அவரது குடும்பமும் அங்கு செல்ல இருக்கிறது.

ஏன் சென்றார்
அந்த நாடு காமன்வெல்த் குழுவில் ஒன்றாக இருக்கிறது. இதனால் அந்த நாட்டில் இருந்து எளிதாக நீரவ் மோடியை கொண்டு வர முடியாது. மேலும் அந்த நாட்டின் மீது இந்தியாவும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே
இவர் ஏற்கனவே அங்கு பலமுறை சென்று இருக்கிறார். அதே போல் இரண்டு வாரம் முன்பு அங்கு கடைசியாக சென்று இருக்கிறார். அப்போதே அங்கு வீடு வாங்கும் ஏற்படும் செய்து இருப்பதாக கூறப்பட்டது.

குடியுரிமை கேட்டு இருக்கிறார்
தற்போது இவர் அங்கு குடும்பத்துடன் குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு 1.5 கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் தொழில் நிறுவனம் தொடங்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதை வைத்து அவர் எளிதாக குடியுரிமை பெற முடியும்.












Click it and Unblock the Notifications