11 ஆயிரம் கோடியைவிட அதிகமாக மோசடி நடந்து இருக்கிறது.. நீரவ் மோடி குறித்து சிபிஐ திடுக்
நீரவ் மோடி ரூ11,360 கோடியை விட அதிக மோசடி செய்துள்ளார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: நீரவ் மோடி ரூ11,360 கோடியை விட அதிக மோசடி செய்துள்ளார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. இதன் மதிப்பு இன்னும் கூட உயரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

பறிமுதல்
இதில் தொடக்கத்தில் நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவரிடம் 23 அசையா சொத்துக்கள் பல்வேறு இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

அடுத்த கட்டம்
அடுத்தக்கட்டமாக அவருக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் 6 கடல் பார்த்த வீடுகளும், 3 தனி வீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்க்கு சொந்தமான 9 சொகுசு கார்கள். பல்லாயிரம் மதிப்புள்ள வாட்ச்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய செய்தி
தற்போது நீரவ் மோடி இன்னும் கூட அதிகமாக மோசடி செய்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரியான கணக்கு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் 2000-3000 கோடி வரை இன்னும் மோசடி மதிப்பு அதிகமாகும் என்று சிபிஐ கணக்கு தெரிவித்துள்ளது.

எதனால்
ஆரம்ப புள்ளி விவரங்கள் தவறாக இருப்பதால் மோசடி தொகை குறைவாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் புதிய தொகை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதே சமயம் இன்னும் மீதம் இருக்கும் சொத்துக்களை கணக்கிடும் போது, இன்னும் மோசடி தொகை அதிகம் ஆகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications