ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'
டெல்லி: ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு 'நிர்பயா அட்டை' என்ற பெயரில் ரயில்வே போலீஸ் உதவி எண்கள் அடங்கிய அட்டைகளை வழங்கி வருகிறது வடக்கு-மத்திய ரயில்வே நிர்வாகம்.
கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
படுகாயமடைந்த அந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.

உயிரிழந்த அந்தப் பெண்ணை நிர்பயா என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்திற்கும் நிர்பயா சட்டம் என்று பெயரிட்டப்பட்டது. இந்த நிலையில் வடக்கு-மத்திய ரயில்வே நிர்வாகம், ரயில் பயணத்தின் போது பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளும் வகையில் ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அடங்கிய 'நிர்பயா அட்டை' வழங்கி வருகிறது. ஏ.டி.எம். அட்டை அளவில் இந்த அட்டை இருக்கிறது.
இந்த அட்டையில் உள்ள எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதும் புகார் அளிக்கலாம் அவ்வாறு அளிக்கும் போது அடுத்த ரயில் நிறுத்தத்தில் காவல் உதவி கிடைக்கும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications