சீனா செல்லும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேபாளம் செல்லும் ராஜ்நாத் சிங்
டெல்லி: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சீனா செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டபோது சீன பிரதமர் ஜி-ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது இந்தியா, சீனா இடையே வர்த்தகம், தொழில் முதலீடுகள் குறித்து ஒப்பந்தங்கள் செய்வது என்று தீர்மானித்தனர்.

இந்நிலையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சீனா செல்கிறார். இதையடுத்து சீன பிரதமர் இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறார்.
ராஜ்நாத் சிங்
தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு குறித்த சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நேபாளத்தில் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேபாளம் செல்கிறார்.












Click it and Unblock the Notifications