• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓ.பன்னீர் செல்வம் மீது நிர்மலா சீதாராமனின் திடீர் கோபத்திற்கு காரணம் என்ன? வெளியான புது தகவல்கள்

By Veera Kumar
|
  பன்னீர் செல்வம் மீதான நிர்மலா சீதாராமன் கோபத்திற்கு என்ன காரணம்?- வீடியோ

  டெல்லி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் டெல்லியில் அளித்த செய்தியாளர் பேட்டிதான், அவரை சந்திப்பதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தவிர்க்க காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச நேற்று டெல்லி சென்றிருந்தார், ஓ.பன்னீர்செல்வம். இவரது திடீர் வருகை பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருந்தது.

  எனவே இதை தெளிவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு, டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்திக்க போகும் முன்பாக நிருபர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

  பரபரப்பு பிரஸ் மீட்

  பரபரப்பு பிரஸ் மீட்

  தமிழ்நாடு இல்லத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது மதியம், மணி சுமார் 2 இருக்கும். அவர் தனது பேட்டியின்போது, மதுரையில் சிகிச்சைபெற்ற தனது சகோதரரை ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம், சென்னைக்கு அழைத்து செல்ல நிர்மலா சீதாராமன் உதவியதாகவும், அதற்கு நன்றி தெரிவிக்க தனிப்பட்ட பயணமாக வந்ததாகவும் கூறினார்.

  அனுமதி மறுப்பு

  இதன்பிறகு, சவுத் பிளாக்கிலுள்ள நிர்மலா சீதாராமன் அலுவலகத்திற்கு 2.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார். ஆனால், நிர்மலா அலுவலகம் வெளியிட்ட ட்வீட்டில், ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என்றும், ராஜ்யசபா எம்.பி மைத்ரேயனுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இதை ஓ.பன்னீர்செல்வம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

  திடீர் முடிவு

  திடீர் முடிவு

  ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி மற்றும், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு அப்பாய்ன்ட்மென்ட் வழங்கப்பட்ட போதிலும், அதை கேன்சல் செய்யுமாறு, நிர்மலா உத்தரவிட்டாராம். இதனால்தான் அதை வெளிப்படையாக அறிவித்துள்ளது நிர்மலா சீதாராமன் அலுவலகம். ஓ.பன்னீர்செல்வம் பிரஸ் மீட்டை டிவியில் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த நிர்மலா சீதாராமன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இதன்பிறகுதான், அப்பாயின்ட்மென்ட் ரத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ரஃபேல் பஞ்சாயத்து

  ரஃபேல் பஞ்சாயத்து

  ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை தனி நபர் ஒருவர் சிகிச்சைக்கு நிர்மலா சீதாராமன் வழங்கினார் என்பது கடும் விமர்சனங்களை ஈட்டியுள்ளது. சில தினங்கள் முன்புதான், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது என லோக்சபாவில் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார். உடனடியாக அதை லோக்சபாவில் மறுத்தார் நிர்மலா சீதாராமன். ஆனால், அது பொய் தகவல் என கூறும் காங்கிரஸ், நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

  தலைவலி

  தலைவலி

  போர் விமான சர்ச்சை ஓயும் முன்பாக, ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை பன்னீர்செல்வத்தின் சகோதரர் தேவைக்காக வழங்கியுள்ள சர்ச்சை வெடித்துள்ளது. இது நிர்மலா சீதாராமனுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்யப்போய் இப்போது உபத்ரவத்தில் சிக்கிக்கொண்டோமே என்ற ஆத்திரம்தான் நிர்மலா சீதாராமன் திடீரென பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்க்க காரணம் என்கிறது டெல்லி வட்டாரம்.

  கம்யூனிஸ்ட் கனகராஜ் தாக்கு

  ஆஹா!
  என்னே மகிமை! என்னே மகிமை!
  ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்!

  ஒரு ஏழை அண்ணன் ஓபிஎஸ் ஸின் தம்பிக்கு ராணுவ ஹெலிக்காப்டர் கொடுத்த பாரியின் வாரிசு நிர்மலா சீத்தாராமன் வாழ்க!

  என்விதியே என்விதியே
  ஏன் என்னைப் பணக்காரனாய்ப் படைத்தாய்!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Nirmala Sitharaman had watched the entire Press meet addressed by OPS at TN house before leaving for South Block, that changed the entire situation.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more