Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் செய்ததையே நாமும் செய்தால்.. அப்புறம் என்ன வித்தியாசம் இருக்கு? சூசகமாக வாரிய நிதின் கட்கரி

Subscribe to Oneindia Tamil

பனாஜி: காங்கிரஸை விட பாஜக வித்தியாசமான கட்சி என்றும், அதனால் பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

கடந்த 2 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே தேர்தல் தோல்வி குறித்த பரிசீலனையில் கட்சியின் தலைவர்கள் இறங்கியுள்ளனர். இப்படி இருக்கையில், காங்கிரஸை விட பாஜக வித்தியாசமான கட்சி என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Nitin Gadkari BJP Congress

கோவா தலைநகர் பனாஜியில் அம்மாநில பாஜக நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த கட்கரி மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் கோவா பாஜக தலைவர் சதானந்த் தனவாடே மற்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்கரி உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், "எனக்கு அத்வானி சொன்ன விஷயத்தை உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். அதாவது பாஜக மற்ற கட்சிகளை விட வித்தியாசமான கட்சி என்று அத்வானி கூறுவார். மற்ற கட்சிகளிலிருந்து நாங்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸின் தவறுகளால்தான் மக்கள் பாஜவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இந்த தவறுகளை மீண்டும் நாம் செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து கட்சியினருக்கு நான் எச்சரிக்கின்றேன். ஒருவேளை காங்கிரஸ் போலவே நாமும் தவறுகளை செய்தால், நாம் ஆட்சியை பிடித்ததற்கான எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். அதனால்தான், வரும் நாட்களில், சமூக, பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் ஒரு கருவி என்பதை கட்சி தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டும், அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். நான் சார்ந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியல் மிகவும் வித்தியாசமானது. பலர் மகாராஷ்டிராவில் சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்த பாணியை நான் நிச்சயம் கடைப்பிடிக்கப்போவதில்லை. சாதி அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று மக்களிடம் வாக்களித்திருக்கிறேன். சாதிகளைப் பற்றி பேசுபவர்கள் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள்.

எந்த ஒரு நபரும் அவர் மீது உள்ள மதிப்புகளால்தான் அறியப்படுகிறார், அவருடைய சாதியல்ல. எனவே சாதி அரசியலில் ஈடுபடாமல் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பிரச்னைகளை புரிந்துக்கொண்டு அதை அரசியலாக்கி தீர்வு காணுங்கள். கோவாவில் 2027 சட்டமன்றத் தேர்தலில் கட்சி ஆட்சியைத் தக்கவைக்க ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அமைப்பை வலுப்படுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கட்கரிக்கும், மோடி-அமித்ஷா கூட்டணிக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வந்திருக்கிறது. கட்கரி மூன்றாவது முறையாக நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது, அவரை தோற்கடிக்க மோடி-ஷா கூட்டணி தீவிரமாக வேலைப்பார்த்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இப்படி இருக்கையில் கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் காங்கிரஸை போன்று இருப்பதாக நிதின் கட்சிகரி சூசகமாக விமர்சித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+