"அதிகரிக்கும் சர்வாதிகாரம்.. சீக்கிரமே உலக போர் வெடிக்கும்!" ஓப்பானாக உடைத்து பேசிய நிதின் கட்கரி
டெல்லி: உலகம் முழுவதும் மோதல் போக்கு நிலவுவதாகவும், எந்த நேரத்திலும் உலகப் போர் வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். உலகெங்கும் சர்வாதிகாரம் அதிகரித்து வருவதால் உலகம் அழிவை நோக்கி மெதுவாகச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதனால் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் போர்ச் சூழல் நிலவி வருகிறது. மத்தியக் கிழக்கில் போர் முடிந்தாலும் அமைதி முழுமையாகத் திரும்பவில்லை.. ரஷ்யா உக்ரைன் மோதல் தொடர்கிறது, சீனா தைவான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதுபோல சர்வதேச அளவில் பதற்றம் நிலவுவதால் அது பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாகவே இருக்கிறது.

உலகப் போர்
நிலைமை கைமீறிச் சென்றால் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாகவும் பல்வேறு வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்தே வருகிறார்கள். இதற்கிடையே மத்தியச் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நிதின் கட்கரி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயும் மோதல் நடந்து வருகிறது. உலகில் இதுபோல பதற்றமான சூழல் நிலவுவதால் உலகப் போர் கூட வெடிக்க வாய்ப்புள்ளது.
சர்வாதிகாரம்
வல்லரசு நாடுகளின் சர்வாதிகாரம் காரணமாக உலகில் ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு மறைந்து வருகிறது. உலகம் முழுவதும் மோதல் போக்கு நிலவி வருகிறது" என்றார். உண்மை, அகிம்சை மற்றும் அமைதி ஆகியவற்றை உலகிற்குச் சொல்லித் தரும் புத்தரின் பூமியாக இந்தியா இருப்பாகப் புகழ்ந்த கட்கரி, இப்போதுள்ள சர்வதேச சூழலை ஆய்வு செய்து எதிர்காலத்திற்கு ஏற்ப சரியான கொள்கைகள் முடிவு செய்யப்படும் என்றார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் மற்றும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் மோதல் சூழ்நிலை நிலவுகிறது. இந்த இரண்டு போர்களின் பின்னணியில் எந்த நேரத்திலும் உலகப் போர் நடக்க வாய்ப்புள்ள சூழ்நிலை உள்ளது. ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மேம்பட்ட தொழில்நுட்பத்தால் போர் முறைகள் மாறிவிட்டன.
மனிதக்குலத்தைப் பாதுகாப்பது கடினம்
இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதக்குலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது. பெரும்பாலும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் சர்வதேச அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனையாகவே இருக்கிறது.
உலகளாவிய மோதல்கள் மெதுவாக உலகை அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன. சர்வாதிகாரம் காரணமாகவே உலகம் அழிவை நோக்கி செல்கிறது. உண்மை என்னவென்றால் இவை அனைத்தும் மெதுவாக அழிவுக்கு வழிவகுக்கிறது. வல்லரசுகளின் சர்வாதிகாரம் அன்பை மறையச் செய்கிறது" என்றார்.
வல்லுநர்கள்
சர்வதேச வல்லுநர்கள் பலரும் உலகில் போர்ச் சூழல் அதிகரித்து வருவதாகவே கூறி வருகிறார்கள். ரஷ்ய அதிபர் புதின் தொடங்கி பலரும் கூட எப்போது வேண்டுமானாலும் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாகவே சொல்லி வருகிறார்கள். ஏற்கனவே இரு உலகப் போர்களில் பூமி மிக மோசமான பேரழிவைச் சந்தித்துள்ளதால் மீண்டும் ஒரு உலகப் போர் வந்தால் அது உலக அழிவின் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications