நிதிஷ்ஜியின் 10 ஆண்டுகால நல்லாட்சிதான் வெற்றிக்கு காரணம்... சொல்வது சிராக் பாஸ்வான்
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் 10 ஆண்டுகால நல்லாட்சிதான் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் என்று தேர்தலில் படுதோல்வி அடைந்த லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி இடம்பெற்றிருந்தது. மொத்தம் 40 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி தற்போது 2 இடங்களில்தான் தேறியுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் கூறியதாவது:
லாலுவின் 10 ஆண்டுகால ஆட்சியை ஒப்பிடுகையில் நிதிஷ்குமாரின் 10 ஆண்டுகளாக நல்லாட்சிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். நிதிஷ்குமாரின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
இந்த வெற்றியில் லாலுவைவிட நிதிஷ்குமாரின் பங்கு அதிகம். நிதிஷ்குமார் மிக பொறுமையுடன் தேர்தல் பிரசாரத்தை நடத்தினார்.
இவ்வாறு சிராக் பாஸ்வான் கூறினார்.
இதேபோல் ராம்விலாஸ் பாஸ்வானும், மக்கள் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications