நம்பிக்கையில்லா தீர்மானம்: 1 மணி நேரம் பேச போகும் மோடி.. இரவோடு இரவாக தயாரான உணர்ச்சிகரமான உரை!
இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் பிரதமர் மோடி ஒருமணி நேரம் அவையில் பேச இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளின் உரைக்கு பதிலளித்து பிரதமர் மோடி ஒருமணி நேரம் அவையில் பேச இருக்கிறார்.
இதற்காக உணர்ச்சிகரமான உரை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரவு முழுக்க இந்த உரை தயார் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி சார்பாக பாஜகவிற்கு எதிராக லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

யாருக்கு எவ்வளவு நேரம்
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் நடக்கும் விவாதத்தில் யார் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது . அதன்படி பாஜக 3 மணி 33 நிமிடம், காங்கிரஸ் 38 நிமிடம், அதிமுகவுக்கு 29 நிமிடம், . திரிணாமுல் காங்கிரஸ் 27 நிமிடம், பிஜு ஜனதா தளம் 15 நிமிடம், தெலுங்கு தேசம் 13 நிமிடம், தெலுங்கானா ராஷ்டீரிய சமித 9 நிமிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 நிமிடம், சமாஜ்வாதி 6 நிமிடம், தேசியவாத காங்கிரஸ் 6 நிமிடம், லோக் ஜனசக்தி கட்சி 5 நிமிடம் பேச முடியும்.

வாய்ப்பு
இந்த நிலையில் இந்த நேர ஒதுக்கீடு பாஜக கட்சிக்கு பெரிய பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது. பாஜக இந்த நிகழ்விற்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் உரைக்கு எதிராக என்ன பேசலாம் என்று நேற்று காலையில் இருந்தே திட்டமிட்டு வருகிறது. 3.30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், நிறைய முக்கியமான விஷயங்களை பேச பாஜக முடிவெடுத்து இருக்கிறது.

பாஜகவில் யார்
பாஜகவில் மொத்தம் முக்கியமான நபர்கள் மட்டும் பேச இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிக நேரம் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. அதன்படி மோடி, ராஜ்நாத் சிங், ராஜேந்திர சிங், விரேந்திர சிங், உள்ளிட்டவர்கள் அதிக நேரம் பேச வாய்ப்புள்ளது. இவர்கள் என்ன மாதிரியான விஷயங்களை பேசுவார்கள் என்றும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

மோடி சிறப்பு உரை
பாஜகவின் உரையை மோடிதான் முடித்து வைக்க இருக்கிறார். இன்று அவர் சுமார் 1 மணி நேரம் அவையில் பேச இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் அவர் உணர்ச்சிகரமாக மக்களுக்கு சில விஷயங்களை கூறுவார். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பேச்சு உருவாக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடம் மட்டுமே கொடுக்கப்பட்டு இருப்பதால் நிறைய முக்கியமான விஷயங்களை அந்த கட்சியால் பேச முடியாது என்று கூறப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications