கெஜ்ரிவால் பங்கேற்ற குடியரசு தின விழாவில் "இங்க்" பேனாவுக்கு தடை!
டெல்லி: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட குடியரசு தின விழாவிற்கு வந்தவர்கள் மை பேனா கொண்டு வர போலீசார் தடை விதித்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல இடங்களில் பல முறை மை வீசப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளம்பெண் ஒருவர் கெஜ்ரிவால் மீது கருப்பு மையை வீசினார்.

முதல்வரை போலீசார் பாதுகாக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடக்கு டெல்லியில் உள்ள சத்ராசால் ஸ்டேடியத்தில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
குடியரசு தின விழாவுக்கு வந்தவர்கள் மை பேனாவை ஸ்டேடியத்திற்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மை பேனா கொண்டு வந்தவர்களிடம் இருந்து அவற்றை போலீசார் வாங்கி வைத்து விழா முடிந்து செல்கையில் திருப்பிக் கொடுத்தனர்.
டெல்லி போலீசார் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சரியான பாதுகாப்பு அளிப்பது இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications