கர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு எதுவும் கிடையாது - தலைமை செயலாளர் தகவல்
பெங்களூர்: பெங்களூரில் இன்று பந்த் நடத்த பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் எனவும் முழு அடைப்பு எதுவும் இல்லை எனவும் கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. பெங்களுரூ, மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரில் உள்ள தமிழர்கள் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. தொடர்ந்து அங்கு தமிழர்கள் சொத்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகம் முழுவதும் மீண்டும் பந்த் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தன. கர்நாடகாவில் நடக்க இருக்கும் பந்த்தால் பெங்களூரூ நகரமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகி இருந்தது. பந்துக்கு 110 சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இன்று முழு அடைப்பு எதுவும் கிடையாது என அம்மாநில தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. அதேபோல் தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் அந்தந்த பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், 144 தடை உத்தரவு இன்று இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 16 இடங்களிலும் நாளை வரை அந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் நாளை ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications