பணம் இல்லை: டயர், குப்பையை வைத்து மனைவியின் உடலை தகனம் செய்த கணவர்
போபால்: மத்திய பிரதேசத்தில் தகனம் செய்ய பணம் இல்லாததால் ஒருவர் தனது மனைவியின் உடலை குப்பை, டயர்களை வைத்து தகனம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீமுச் கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியினத்தவரான ஜகதீஷ் பில்(65). நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரது மனைவி நஜோ பாய் உயிர் இழந்தார். இதையடுத்து ஜகதீஷ் தனது மனைவியின் உடலை முறைப்படி தகனம் செய்ய எடுத்துச் சென்றார்.

இடுகாட்டில் இருந்த ஊழியர்கள் உடலை தகனம் செய்ய ரூ.2 ஆயிரத்து 500 கேட்டனர். தினக்கூலியான அவரிடம் வெறும் ரூ.250 இருந்தது. இடுகாடு ஊழியர்களோ தகனம் செய்ய பணம் இல்லை என்றால் உங்கள் மனைவியின் உடலை ஆற்றில் வீசிவிடுங்கள் என்றனர். தகனம் செய்ய பணம் இல்லாதவர்கள் சடலங்களை ஆற்றில் வீசுவது அப்பகுதியில் வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால் அவருக்கு தனது மனைவியின் உடலை முறைப்படி தகனம் செய்ய விருப்பம்.
இதையடுத்து ஜகதீஷ் இடுகாட்டுக்கு அருகே குழி தோண்டிக் கொண்டிருந்தார். இது குறித்து அறிந்த அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜகதீஷுக்கு தனது சொந்த பணத்தில் ரூ. 1,500 கொடுத்தார்.
அந்த பணத்தில் மரக்கட்டை வாங்கினார் ஜகதீஷ். கட்டைகள் போதாததால் அவர் குப்பை, டயர்கள், பேப்பர்களையும் கட்டைகளோடு சேர்த்து தனது மனைவியின் சடலத்திற்கு எரியூட்டினார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications