இந்திய ராணுவம் மூலம் மீண்டும் உயிர்பெறும் ' ஜெய் ஹிந்த்’ ‘பாரத் மாதா கி ஜெ’
டெல்லி: ஆங்கிலேயர்கள் சொல்லிக்கொடுத்த ' குட்மார்னிங் ' இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதிலாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என இந்திய ராணுவத்திற்கு தளபதி பைக்ராம்சிங் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராணுவத்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் குட்மார்னிங்குக்கு குட்பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்திக்கொண்டனர்.

இது குறித்து ராணுவ தளபதி பைக்ராம்சிங் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
ராணுவ ஊழியர்கள் அனைவரும் குட்மார்னிங், குட்ஆப்டர்னூன், போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இதற்கு பதிலியாக ' ஜெய் ஹிந்த் '- என்றே மரியாதை செலுத்த வேண்டும்.
எந்த வொரு பணி துவங்கும் போதும் ' ஜெய் ஹிந்த் '-என்று சொல்லிக்கொள்ள வேண்டும், இதே போல் எந்தவொரு பணி முடியும் போது ‘பாரத் மாதா கி ஜெ' என்று சொல்லிக்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போன்று நாம் உச்சரிக்கும்போது ஒருவருக்கொருவர் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறையும். இது தேசப்பற்றை வளர்க்கும் என தளபதி தெரிவித்துள்ளார்.
நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள் தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும், மேலும் துறை ரீதியாக ராணுவ உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என்ற வேறுபாட்டை களையப்பட வேண்டும். இதற்கென துறை சார்பில் நடக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பினரும் பங்குபெறுமாறு நடத்த வேண்டும்.
ராணுவ துறையினரின் குழந்தைகள் அதிகாரிகள், சாதாரண சிப்பாய்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். இவ்வாறும் தளபதி கேட்டு கொண்டுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
இந்தியவினை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தியிருந்த போது உச்சரிக்கப்பட்ட ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உச்சரித்த இந்த மந்திர வார்த்தை இந்திய ராணுவம் மூலம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications