நீட் வினாத்தாள் குளறுபடி.. இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது.. சுப்ரீம்கோர்ட் ஷாக் உத்தரவு
நீட் தமிழ் வினாத்தாள் வழக்கில் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லி: நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி வழக்கில் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வை, 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்.
தமிழகத்தில் இருந்து மாணவர்கள் 1.07 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.

வினாத்தாள் குளறுபடி
இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் பிழை என டி.கே.ரங்கராஜன் எம்.பி வழக்கு தொடர்ந்தார்.

சிபிஎஸ்இ மேல்முறையீடு
இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது.

சிபிஎஸ்இ குற்றச்சாட்டு
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றது. மேலும் மருத்துவ படிப்பு முழுவதும் ஆங்கிலத்தில் தான் உள்ளது என்ற சிபிஎஸ்இ, ஆரம்பத்தில் இருந்தே தமிழகம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டியது.

கூடுதல் மதிப்பெண் கிடையாது
இதனைக்கேட்ட உச்சநீதிமன்றம் நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க முடியாது என கைவிரித்துள்ளது. தவறான வினாக்களுக்கு இந்த ஆண்டு எந்த சலுகையும் வழங்க முடியாது என்றும் சுப்ரீம்கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications