மோடி தத்தெடுத்த கிராமத்தில் ஒரு முஸ்லீம் கூட இல்லையாமே?
வாரணாசி: பிரதமர் மோடி தத்தெடுத்த கிராமத்தில் இஸ்லாமிய மதம் உள்ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனித நகரமான வாரணாசியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் தனது தொகுதிக்குட்பட்ட ஜெயபூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த கிராமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செயல்பட வேண்டும்.
குழந்தைகளுக்குக் கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புறத் தூய்மையை குடும்பத்தின் கொள்கையாகக் கொள்வது ஆகியவற்றை உறுதி மொழியாக இந்தக் கிராமத்தினர் எடுத்து கொள்ள வேண்டும்.
ஜெயபூர் கிராமத்தோடு இணைந்து செயலாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயபூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயபூரை உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறினார்.
இதனிடையே, இந்த கிராமத்தில் இந்து மதத்தின் `குர்மி` இனத்தவரைத் தவிர வேற்று மதத்தினர் யாரும் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வரும் இந்த குர்மி இனத்தவர்கள் வசிக்கும் ஜெயபூர் கிராமம், 450 ஆண்டுகால வரலாற்றை உடையது என்பதோடு, ஒரு முழுமையான இந்துக்கள் வசிக்கும் கிராமமும் ஆகும்.
இது தொடர்பாக, கருத்து கூறிய பா.ஜ.க.வினர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாசிக்காமல் போனது தற்செயலானது. வரும் 2016 ஆம் ஆண்டுக்குள் முன் மாதிரி கிராமமாக ஜெயபூர் உருவாக்கப்படும் என்று தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications