நிலக்கரி ஊழல்: அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசு அனுமதி தேவையில்லை: கோர்ட் உத்தரவு
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசு அனுமதி தேவையில்லை, நீதிமன்ற உத்தரவே போதுமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்தான் விசாரணையை நடத்தி வரும் சி.பி.ஐ., விசாரணையில் கண்டறியப் பட்ட தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து வருகிறது.
இந்த முறைகேட்டில் சுரங்கத்துறை இணை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவைப்படுவதாக சி.பி.ஐ. வக்கீல் தனது வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. வழக்கை நீதிமன்றமே கண்காணிப்பதால் அதன் உத்தரவே போதுமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications