நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பாஜக: அத்வானியை புறக்கணித்துவிட்டு முடிவு!
டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டுக்கான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூத்த தலைவரான எல்.கே. அத்வானி இக் கூட்டத்தை புறக்கணித்தபோதும், அவரை புறக்கணித்துவிட்டு இந்த அறிவிப்பை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பையடுத்து நரேந்திர மோடிக்கு ராஜ்நாத் சிங், பாஜக முன்னாள் தலைவர் நிதின்
கட்காரி, மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு, அனந்த் குமார், முதலில் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது ஜோஷியின் காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார்.
அத்வானியை புறக்கணித்த பாஜக:
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கடந்த சில நாட்களாக அத்வானியை சமாதானப்படுத்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தீவிரம் காட்டியது. இதற்காக பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை தூதராக நியமித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது.

ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக்க தொடர்ந்தும் அத்வானி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இன்று நடக்கும் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புதலும் தெரிவித்திருந்தார் அத்வானி. ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவை நிச்சயம் ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை 5.30க்கு பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல மூத்த தலைவர்கள் கூட்டத்துக்கு வந்துவிட்ட நிலையில் அத்வானி இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்.
இதனால் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால் அத்வானி தமது கலகக் குரலை பகிரங்கமாக வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது.

இதனிடையே பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து பாஜக தலைமையகத்துக்கு வெளியே மோடி ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் ஆர்எஸ்எஸ் மிக முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications