ஹெல்மெட் அணியாவிட்டால் இனி பெட்ரோல், டீசல் கிடையாது: இது எம்.பி.யில்
போபால்: ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் அளிக்கக் கூடாது என்று மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணியுமாறு அரசும், போக்குவரத்து போலீசாரும் எத்தனை முறை கூறினாலும் அவர்கள் கேட்பது இல்லை. ஏதோ ஹெல்மெட் அணியாமல் செல்வது தான் ஸ்டைல் என்று நினைக்கிறார்கள்.

இந்நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மத்திய பிரதேச அரசு அதிர்ச்சி அளித்துள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வலியுறுத்தி பேனர்களை வைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு பெட்ரோல், டீசல் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளில் பலர் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயம் அடைந்து பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications