5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா மத்திய அரசு?
ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகளை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லி: ரூ.5,000 மற்றும் ரூ.10,000 மதிப்பிலான நோட்டுகளை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து மக்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வங்கிகளிடமும், தபால் அலுவலகங்களிடமும் ஒப்படைக்கப்பட்டன.

பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வங்கி, ஏடிஎம் வாசல்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்தனர். இந்நிலையில் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு ஆர்பிஐ கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில் அவ்வப்போது பணம் எடுப்பதற்கான தொகையை அதிகரித்துக் கொண்டே வந்த ஆர்பிஐ, ஒரு கட்டத்தில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை நீக்கியது.
இதனிடையே, ரூ.1000 நோட்டு அச்சடிக்கப்படுவதாகவும், ரூ.2000 நோட்டும் செல்லாததாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டை திரும்ப பெறும் திட்டம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அதேபோல் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை இல்லை என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி தாஸ் காந்தி தெளிவுபடுத்தினார். இந்நிலையில் ரூ.5000 மற்றும் ரூ.10000 நோட்டுகளை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications