ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை எதிர் நோக்கியா காத்திருக்கிறீர்கள்.. இங்க பாருங்க வேடிக்கையை!
டெல்லி: ஆர்.கே.நகரில் இடைத் தே்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது.
ஜெயலலிதா உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி கடந்த டிசம்பர் 5ம் தேதி முதல் காலியாக உள்ளது. 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இடையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக அம்மா கட்சியினர் அதாவது தினகரன் கட்சியினர் "அம்மா குடிநீர்" மாதிரி பணத்தை வாரியிறைத்து விளையாடியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்று தேர்தல் கமிஷன் மொத்தமாக கைவிரித்து விட்டது. இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா மறைவு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து தேர்தல் கமிஷன், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. சாதாரணமான சூழ்நிலையில் இந்த தொகுதியில் தேர்தல் நடந்திருக்க வேண்டியது 2021-ம் ஆண்டு மே மாதம் 24-ந்தேதி ஆகும்.

6 மாதத்திற்குள்
ஜெயலலிதாவின் மறைவின் காரணமாக காலியான இந்த இடத்தை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும். இதன்படி 2017-ம் ஆண்டு மார்ச் 16 ம்தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிக்கையில் 2017 ஏப்ரல் 12ம் தேதியன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பணப் பட்டுவாடா
ஆனால் அந்த தொகுதியில் பெருமளவில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்யவும் வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிக்கவும் வேட் பாளர்களும், அரசியல் கட்சிகளும் ஈடுபட்டதால் கடந்த ஏப்ரல் 9-ந்தேதியன்று இந்த தேர்தலை ரத்துசெய்து தேர்தல் கமிஷன் அறிவிக்கை வெளியிட்டது.

சூழ்நிலை இல்லை
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நிலுவையில் உள்ள இடைத்தேர்தலை மீண்டும் நடத்தும் வகையில் சூழ்நிலை உள்ளதா என்று அறிந்து கொள்ள தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தற்போது வரை இந்த சூழ்நிலையில் எந்த மாறுதலும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது.

கெடு முடிந்தது
விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டிய கெடு கடந்த ஜூன் 4-ந்தேதி முடிவடைந்த நிலையில் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை தொடருகிறது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒரு அறிக்கை பெறப்பட்டது. அவரும் அங்கு சுதந்திரமான முறையில் நடத்தும் வகையில் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று பரிந்துரை செய்து இருக்கிறார்.

சூழல் வரட்டும் காத்திருக்கிறோம்
இதனை தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் இடைத்தேர்தலை மேலும் ஒத்திவைப்பது குறித்த பிரச்சினைகள் பற்றி மத்திய சட்ட அமைச்சகத்திடம் விளக்கமாக கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகமும் தனது ஒப்புதலை அளித்து உள்ளது. எனவே தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்குள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலை நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தும் வகையில் தகுந்த சூழ்நிலை அமைந்ததும் தேர்தல் நடத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆக.. ஆர்.கே.நகருக்கு இப்போதைக்கு தேர்தலே கிடையாது!
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications