சட்டசபை தேர்தல்.. தொகுதி கிடைக்காமல் அல்லாடும் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவாண்!
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து எதிர்கொள்ள இருக்கிறது.
தற்போது மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராக இருக்கிறார் முதல்வர் பிரித்விராஜ் சவாண். அவர் சட்டசபை தேர்தலில் கராத் (தெற்கு) தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.
ஆனால் இத்தொகுதியை 20 ஆண்டுகாலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் விலாஸ் ககா பாட்டீல் விட்டுக் கொடுக்க மறுத்து வருகிறார். அதையும் மீறி பிரித்விராஜ் சவாணுக்கு தொகுதியை தாரை வார்த்துக் கொடுத்தால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட தயங்கமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் மேலிடம் சவாணுக்கான பாதுகாப்பான தொகுதி எது என்பதை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications