பதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ
Recommended Video

திருவனந்தபுரம்: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ முல்லக்கல், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தப் பதட்டமும் இல்லாமல் ஜாலியாக சிரித்தபடி காணப்பட்டார்
ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றி வந்தவர் பிராங்கோ. அங்கு கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சர்ச்சையில் சிக்கினார். 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 13 முறை அந்தப் பெண்ணை பிராங்கோ பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பதிவாகியுள்ளது.

அவரை தற்போது போப்பாண்டவர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்த நிலையில் கேரள காவல்துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். கொச்சியில் வைத்து விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று அவர் கோட்டயம் மாவட்டம் பாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது எந்தப் பதட்டமும் இல்லாமல் ஜாலியாக, கேஷுவலாக சிரித்தபடி காணப்பட்டார் பிஷப் பிராங்கோ. கோர்ட்டில் இன்று நடந்த விசாரணை முடியும் வரை புன்னகையுடன்தான் இருந்தார். கோர்ட்டுக்கு வெளியே அவர் அழைத்து வரப்பட்டபோது அங்கு கூடியிருந்த பெரும் திரளான மக்கள் சத்தம் போட்டு திட்டினர். ஆனால் அதற்கும் பிராங்கோவின் ரியாக்ஷன் புன்னகைதான்!
முன்னதாக நேற்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக பிராங்கோ கூறியதால் அவரை கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். அங்கு அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications