ஜான்சியில்தான் போட்டி...சோனியாவுக்கு எதிராக போட்டியிடச் சொன்னாலும் ஓகே.: உமாபாரதி
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி அறிவித்துள்ளார். இருப்பினும் கட்சி மேலிடம் கட்டளையிட்டால் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென யோகா குரு பாபா ராம்தேவ், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக உமாபாரதியை களமிறக்கலாம் என்று கூறினார்.

அத்துடன் உமாபாரதியை தொடர்பு கொண்டும் இது குறித்து ராம்தேவ் பேசினார். இதனால் ரேபரேலி தொகுதியில் உமாபாரதி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தாம் ஜான்சி தொகுதியில் மட்டுமே போட்டியிட விரும்புகிறேன். என்னை ரேபரேலியில் போட்டியிட வேண்டும் என்கிற பாபா ராம்தேவின் கருத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.ஆனால் ஜான்சி தொகுதியை விட்டு விலக முடியாது என்று கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் தாம் தெரிவித்துவிட்டதாக உமாபாரதி கூறியுள்ளார்.
அத்துடன் பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டால் 2வது தொகுதியாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட தயார் என்றும் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியும், சோனியாவின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications