27வது மாடியில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை.. நொய்டாவில் அதிர்ச்சி
நொய்டா: உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் மூன்று வயது பெண் குழந்தை 27வது மாடியில் இருந்து தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அம்மா சமையலறையில் இருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனியில் தவறி விழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா கார் சிட்டியில் அப்பார்ட்மென்ட் உள்ளது. ஒரு தம்பதி தங்களின் மூன்று வயது பெண் குழந்தையுடன் 27வது மாடியில் வசித்து வருகின்றனர். நேற்று அந்த குழந்தையின் அப்பா வேலைக்கு செல்ல, அம்மா சமையலறையில் இருந்துள்ளார்.

குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளது. நண்பகல் 12.30 மணியளவில் பால்கனி அருகே விளையாடும்போது, குழந்தை திடீரென்று தவறி கீழே விழுந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அம்மா அதிர்ச்சியடைந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை 12வது மாடி பால்கனியில் விழுந்துவிட்டது.
இதனால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்த வீட்டுக்காரர் குழந்தையை தூக்கி சமதானப்படுத்தியுள்ளார். தொடர்ந்து குழந்தையின் அம்மாவும் அங்கு சென்றுள்ளார்.
இதையடுத்து குழந்தை உடனடியாக அருகில் உள்ள சர்வோதயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தையின் உடல்நிலை சற்று மோசமாக தான் இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து குழந்தை மீளவில்லை. இருப்பினும் தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பால்கனியில் அழுது கொண்டிருக்கும் குழந்தையை ஒருவர் தூக்கி செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் அம்மா கவனக் குறைவாக இருந்ததே சம்பவத்துக்கு காரணம் என்று ஒரு தரப்பில் குற்றம் சாட்டினர். மறுதரப்பில், நொய்டாவில் ஏராளமான அப்பார்ட்மென்ட்கள் உள்ளன. ஆனால் அங்கு போதிய பாதுகாப்பு இல்லை. எனவே, அங்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் மற்றும் வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் இது எதார்த்தமாக நடைபெற்ற விபத்து என்பதால், வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அப்பார்ட்மென்ட் ஒன்றில் குழந்தை பால்கனியில் இருந்து தவறி விழுந்தது. அப்போதும் அக்கம் பக்கத்தினர் தான் அந்த குழந்தையை மீட்டனர். எனவே பெற்றோர் குழந்தைகளை முறையாக பாதுகாக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications