வேற லெவல்.. இந்தியாவின் எதிர்காலம் பற்றி கவலையே வேண்டாம்! நாடே இந்த இளைஞரை பார்த்து வியக்கிறதே ஏன்?
நொய்டா: நொய்டாவில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் சாலையில் ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இது என்ன பெரிய விஷயமா? இது ஏன் ஹிட் அடித்தது என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் அந்த இளைஞர் அப்படி ஓடியதற்கு பின் உருக்கமான காரணம் இருக்கிறது! வாருங்கள் என்ன நடந்தது என்று பார்க்கலாம்!
Recommended Video
உத்தர காண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப் மெஹ்ரா. 19 வயதாகும் இவர் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
காலையில் செல்லும் இவர் இரவு 11 மணிக்கு பின் கடை அடைக்கும் வரை அங்கேயேதான் இருப்பார். வறுமையான பின்னணியை கொண்டவர் என்பதால் இவருக்கு இந்த வேலை மிக முக்கியம்.

நொய்டா
நொய்டாவில் இவர் பணியாற்றும் இடத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பரோலா என்ற பகுதியில் இவர் வசித்து வருகிறார். தனது அண்ணனுடன் வசித்து வரும் இவர் காலையிலேயே எழுந்து 8 மணிக்குள் உணவு சமைத்து, அதை பார்சல் செய்து, நடந்தபடியே மெக் டொனால்ட்ஸ் செல்கிறார். அங்கு நாள் முழுக்க பணியாற்றிவிட்டு மீண்டும் நடந்தபடி வீட்டிற்கு வருகிறார்.

இளைஞர் ரன்னிங்
இவர் இரவில் மட்டும் நடக்காமல், வேகமாக ஜாக்கிங் செய்தபடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில்தான் பிரபல இயக்குனர் வினோத் காப்ரி நேற்று இவரை சாலையில் சந்தித்து இருக்கிறார். மெக் டொனால்ட்ஸில் பணி முடித்துவிட்டு பிரதீப் வேகமாக பேக்கை மாட்டிக்கொண்டு ஓடி இருக்கிறார். அப்போது அங்கே வந்த இயக்குனர் வினோத்.. வா வந்து என் காரில் ஏறு. உன்னை டிராப் செய்கிறேன் என்று கூறி உள்ளார்.

மறுப்பு
அதற்கு அந்த இளைஞர் சிரித்தபடி மறுத்துவிட்டு.. நான் ஓடியே வீட்டிற்கு சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். ஏன் உன்னிடம் வாகனம் இல்லையா, பேருந்தில் போக மாட்டாயா என்று அவர் கேட்டுஇருக்கிறார் . இதற்கு அந்த இளைஞர் பிரதீப், இல்லை எனக்கு டிரெய்னிங் செய்ய வேண்டும். நான் இராணுவத்தில் சேர போகிறேன். அதற்கு போதிய பயிற்சி செய்ய நேரமில்லை. அதனால் இப்படி ஓடி ஓடி பயிற்சி எடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எங்கே வசிக்கிறார்
அந்த இளைஞர் பிரதீப் தனது அண்ணனுடன் வசித்து வருகிறார். இவரின் தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் பணம் சம்பாதிப்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாட்டிற்காக ராணுவத்தில் இணைந்து சேவை செய்ய வேண்டும் என்று இப்படி தினமும் கிட்டத்தட்ட 20 கிமீ ஓடி பயிற்சி எடுத்து வருகிறார் பிரதீப்.

வீடியோ டிரெண்ட்
மேலும் இந்த வீடியோவில் அந்த இயக்குனர் வினோத், இளைஞர் பிரதீப்பிடம்.. இப்போது நீ ஓடினால் எப்போது இரவு உணவு சாப்பிடுவாய் என்று கேட்டுள்ளார். அதற்கு பிரதீப், நான் வீட்டிற்கு போன பின் சமைத்து சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் வினோத், என்னுடன் வா வந்து சாப்பிடு என்று கூறியுள்ளார். ஆனால் அந்த இளைஞரோ, இல்லை என் அண்ணன் இரவு பணி பார்க்கிறார். நான் சமைக்கவில்லை என்றால் அவருக்கும் சாப்பாடு கிடைக்காது என்று கூறி மறுத்துள்ளார்.

உருக்கமான காரணம்
பிரதீப்புடன் நடைபெற்ற "ரன்னிங்" உரையாடலை அந்த இயக்குனர் வினோத் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். நேற்று இரவு 12 மணிக்கு இவரை சாலையில் பார்த்தேன். முதுகில் பேக் மாட்டிக்கொண்டு ஓடினார். நான் லிப்ட் கொடுத்ததற்கும் கூட.. அதெல்லாம் வேண்டாம் என்று கூறினார். இவர் பேசுவதை கேட்டால் உங்களுக்கும் இவரை பிடித்து போகும்.. இவர் சுத்தமான தங்கத்தை போன்றவர் என்று பாராட்டி உள்ளார். சமூக வலைத்தளங்களில் பலர் இதை பகிர்ந்து பாராட்டி உள்ளனர் .












Click it and Unblock the Notifications