கடன் மோசடி வழக்கு...மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிப்பு
மும்பை: கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத கைது வாரண்டை மும்பை அமலாக்கத்துறை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரைகடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, இங்கிலாந்து நாட்டுக்குத் தப்பி சென்றார். அவருக்கு எதிராக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து ரூ.900 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விஜய் மல்லையா மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கதுறையும் விஜய் மல்லையாவின் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத மல்லையாவின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அமலாக்கப்பிரிவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை பிறப்பிக்கக் கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
விசாரணையின் போது விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கூடாது என்று கிங் பிஷர் நிறுவனம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் கிங் பிஷர் நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications