இன்று இருக்கிறோம்.. நாளை இருப்போமா என தெரியாது.. சிரியாவை தோலுரிக்கும் இரண்டு சிறுமிகள்- வீடியோ
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.
இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் இரண்டு சிறுமிகள் சிரியாவில் என்ன நடக்கிறது என்று வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
— Noor And Alaa (@Noor_and_Alaa) February 23, 2018 |
யார் இவர்கள்
நூர் மற்றும் அலா என்று இந்த இரண்டு சிறுமிகள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கவுட்டா என்று போர் நடக்கும் பகுதியில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் இருந்து நேரடியாக இவர்கள் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்கள் அக்கா, தங்கைகள் ஆவர்.
|
மோசமான தாக்குதல்
இவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடந்து இருக்கிறது. ''ஐயோ எங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்'' என்று இவர்கள் கதறுவது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
|
பக்கத்து வீடு போனது
இதில் இவர்களின் பக்கத்து வீடு தாக்கப்பட்டு இருக்கிறது. சிறிய இடைவெளியில் இவர்கள் வீடு தப்பித்துள்ளது. இதுகுறித்து நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்று இவர்கள் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
|
மோசமான வாழ்க்கை
''கடந்த ஆறு நாட்களாக இங்கு போர் நடந்து வருகிறது. மோசமாக தாக்கப்பட்டு வருகிறோம். தினமும் மரணத்தை சந்திக்கிறோம். எங்களுக்கு பயமாக இருக்கிறது. இந்த வாழ்க்கையை உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாது'' என்றுள்ளார்கள்.
|
மிகவும் மோசம்
இந்த வீடியோவில் அந்த பகுதி எப்படி தாக்கப்படுகிறது என்று நூர் பேசி இருக்கிறாள். ஆனால் இதில் மோசமான விஷயம் என்ன வென்றால் அவள் பேசும் போதே பின்பக்கம் குண்டுகள் போடப்படும் சத்தம் கேட்கிறது. அவளும் அதற்கு பயந்து கொண்டு உட்பக்கம் வருகிறாள்.
|
ஆபத்தில் இருக்கிறோம்
இதில் ''நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் எங்களை சுற்றி குண்டுகள் போடப்படுகிறது. இந்த முட்டாள் தனத்தை நிறுத்துங்கள். நாங்கள் வாழ வேண்டும். நாங்கள் சாக விரும்பவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அப்போது சரியாக அங்கு குண்டு போடப்படுகிறது.
|
நிலை என்ன
இதுதான் இங்கு இருக்கும் குழந்தைகளின் நிலை பாருங்கள், உலகமே இப்படித்தான் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றுள்ளனர்.
|
காப்பாற்றுங்கள்
இதில் ''நாங்கள்தான் நூர் மற்றும் அலா, இந்த நாள் இங்கே மிகவும் மோசமாக இருந்தது. இங்கு இருக்கும் குழந்தைகளை காப்பற்றுங்கள்'' என்று நாட்டு தூதுவருக்கு வீடியோ மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications