அஸ்ஸாம்:அங்கீகாரம் பெறாமல் மாடுகளை வெட்டினால் இனி 8 ஆண்டு வரை சிறை- வடகிழக்கு மாநிலங்கள் அதிருப்தி!

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அங்கீகாரம் பெறாமல் மாடுகளை இறைச்சிக்காக வெட்டினால் அல்லது மாடுகளை ஏற்றிச் சென்றால் 6 மாதம் முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் சட்டசபையில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது முதல் மாட்டிறைச்சி தடை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஸ்ஸாம் சட்டசபையில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா கால்நடைகள் பாதுகாப்பு சட்ட மசோதா திங்கள்கிழமையன்று தாக்கல் செய்தார். இந்த புதிய சட்ட மசோதாவானது மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: அஸ்ஸாமில் இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், மாட்டிறைச்சியை சாப்பிடாத சமூகத்தினர் வாழும் பகுதிகள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில் 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது; உரிய அங்கீகாரம் அல்லது அனுமதி இல்லாமல் மாடுகளை இறைச்சிக்காக வெட்டவும் கூடாது; மாடுகளை இறைச்சிக்காக ஏற்றி செல்லவும் கூடாது.

8 ஆண்டுவரை சிறை

8 ஆண்டுவரை சிறை

அனுமதியின்றி மாட்டிறைச்சி விற்பனை செய்தாலோ, மாடுகளை ஏற்றி சென்றாலோ 6 மாதத்தில் இருந்து 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்; அதேபோல் ரூ1,000 முதல் ரூ5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜாமீன் இல்லை

ஜாமீன் இல்லை

இந்த சட்டத்தை மீறி செயல்பட்டு தப்பி ஓடி தலைமறைவானால் அவர்கள் வாழ்ந்த இடங்களிலும் பொது இடங்களில் அவர்களது புகைப்படங்கள் ஒட்டப்படும்; இந்த நபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் தொடரப்படும் என்பதும் இந்த மசோதாவின் முக்கிய அம்சம்.

மாட்டிறைச்சி பயன்பாடு

மாட்டிறைச்சி பயன்பாடு

அஸ்ஸாம் மாநிலத்தில் 34% முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதேபோல் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதனால் மாட்டிறைச்சி பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. மேலும் மாட்டிறைச்சி பயன்பாடு என்பது அண்டை மாநிலங்களான நாகாலாந்து, மிசோரம், மேகாலயாவிலும் உள்ளது.

வடகிழக்கில் எதிர்ப்பு

வடகிழக்கில் எதிர்ப்பு

அஸ்ஸாம் மாநிலத்தின் இந்த புதிய சட்ட மசோதா இதர வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மாவுடன் பேச இருப்பதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்திருக்கிறார். அத்துடன் மேற்கு வங்கம், பீகார், தெலுங்கானாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு மாடுகள் இறைச்சிக்காக கொண்டுவரப்படுகின்றன. தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தின் வழியாகத்தான் மாடுகள் கொண்டு செல்லப்பட வேண்டும். தற்போதைய அஸ்ஸாம் புதிய சட்டத்தால் இறைச்சிக்காக மாடுகள் கொண்டுவரப்படுவது பாதிக்கும் என்பதும் வடகிழக்கு மாநிலங்களின் கருத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+