வட இந்தியாவை விட தென்னிந்தியா செம சுத்தம்.. உலக சுகாதார அமைப்பின் அல்ட்டிமேட் ஆய்வு!
வடஇந்திய நகரங்களை விட தென்னிந்திய நகரங்கள் அதிக அளவு தூய்மையுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
Recommended Video

டெல்லி: வடஇந்திய நகரங்களை விட தென்னிந்திய நகரங்கள் அதிக அளவு தூய்மையுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. வடஇந்திய நகரங்கள்தான் அதிக மாசுக்களுடன் இருப்பதாகவும், தென்னிந்திய நகரங்கள் மிகவும் தூய்மையாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
உலகில் இருக்கும் மிகவும் அசுத்தமான 20 நகரங்களில் வடஇந்திய நகரங்கள் அதிக இடம்பிடித்து இருக்கிறது. மிகவும் மாசு படிந்து மக்கள் வசிக்க கஷ்டப்படும் இடங்கள் என்று இந்த பகுதிகளை உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலகில் உள்ள மொத்தம் 4,300 நகரங்களை உலக சுகாதார அமைப்பு சோதனை நடத்தியது.
அதிலும் முக்கியமாக முதல் 20 இடங்களில் 14 இடங்களை இந்தியா பெற்று இருக்கிறது. இதில் முதல் இடம், உத்தர பிரதேச மாநிலத்திற்குத்தான். உலகிலேயே உத்தர பிரதேசத்தில் உள்ள, கான்பூர்தான் அதிக மாசுக்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

வட இந்தியா
இதற்கு அடுத்தபடியாக நிறைய வடஇந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளது. பரிதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, டெல்லி, லக்னோ, ஆக்ரா, முசாபர்நகர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்ப்பூர், பட்டியாலா, ஜோத்புர் ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இதில் அதிக பகுதிகள் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் கணக்கு படி உலகிலேயே மோசமான நகரங்கள் இவைதான் .

தென்னிந்திய பகுதிகள்
இந்த நிலையில் உலக சுகாதாரா அமைப்பு அவர்கள் அறிக்கையில் முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டுள்ளது. அதன்படி வடஇந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தென்னிந்திய மிக மிக தூய்மையாக இருப்பதாக கூறியுள்ளது. முக்கியமாக இந்திய அளவில் மட்டுமில்லாம உலக அளவில் மிக குறைந்த மாசுக்களை கொண்ட பகுதிகளில் தென்னிந்தியா இடம் பிடித்துள்ளது.

எந்த நகரம்
இதில் தென்னிந்திய நகரங்களை உலக சுகாதார அமைப்பு எடுத்துக்காட்டாக கூறியுள்ளது. அதன்படி சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், விஷாகப்பட்டினம், பெங்களூர், கொச்சி, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளை எடுத்துக்காட்டாக கூறியுள்ளது. இந்த பகுதிகளில் மிகவும் குறைந்த அளவே மாசு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக சென்னை மிகவும் குறைந்த மாசுடன் இருப்பதாகவும் கூறியுள்ளது.

எப்படி சாத்தியமானது
இது எப்படி சாத்தியமானது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதன்படி, தென்னிந்தியா மாசு கட்டுப்பாடு விதிகளை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்கிறார்கள் என்றுள்ளது. அதிக தொழிற்சாலைகள் இருக்கும் தூத்துக்குடியில் கூட வாரணாசியை விட மாசுக்கள் குறைவாக இருப்பதாக கூறியுள்ளது. அதி நவீன தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்து மாசுக்களை கண்காணிப்பதே இதற்கு காரணம் என்றுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications