தென்னிந்தியர்கள் மீது கொடூரமான வன்ம வெறியை கக்கும் 'வடக்கன்' வீடியோ- சோசியல் மீடியாவில் கொந்தளிப்பு!
சென்னை: தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இழிபிறவிகள், கறுப்பர்கள் என அருவறுக்கத்தக்க வகையில் வன்மத்துடன் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் வட இந்தியாவைச் சேர்ந்த Realtor Nav Rattan Kapoor என்ற நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Realtor Nav Rattan Kapoor என்ற வட இந்தியாவைச் சேர்ந்த இந்த நபர் தம்மை சமூக ஆர்வலர் என கூறிக் கொண்டு தென்னிந்தியர்களுக்கு எதிரான வன்மமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்தி மொழி திணிப்புக்கு எதிரான தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநில மக்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தி விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி மொழி, சமஸ்கிருத மொழி திணிப்புகள், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் பறிப்பு, மாநிங்களுக்கான நிதி மறுப்புகள் ஆகியவற்றை முன்வைத்து தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் உரிமைக் குரல் எழுப்பி வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகள் தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றன.
Guys this person in linked in #Realestator_Nav_Rattan_Kapoor
— Jai Bheem (@jaibheem96) April 21, 2025
Report him... he's abusing south Indian regional langauge and ethnicity...@ChekrishnaCk @Advaidism @JOYravishankar @royalreddytwitt mam look on him pic.twitter.com/jzagSS2bvO
ஆனால் இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சனையை வட இந்தியர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு Realtor Nav Rattan Kapoor என்பவரின் இந்த வீடியோதான் நல்ல உதாரணம்.
இந்த வீடியோவில், கேவலமான தென்னிந்தியர்களுக்கு என்னதான் பிரச்சனை? இந்தியை பேச முடியாது என்கின்றனர். இந்த கறுப்பு நிற மக்கள் பார்க்கவே அருவறுப்பானவர்கள்.. எப்ப பார்த்தாலும் இந்தி பேச முடியாது.. இந்தி பேச முடியாது என்கின்றனர்.. நல்லது.. இந்தியை பேச வேண்டாம்.. அமைதியாக இருந்துவிட்டு போங்க.. இவர்களை எல்லாம் பார்க்கும் போது 6 வட இந்திய மாநிலங்கள் பேசாமல் பிரிந்துவிட்டால் நல்லது என தோன்றும்.. அவர்களது மரபணுவே அசிங்கமானது.. நாங்கள் பழுப்பு நிறத்தவர்கள். ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மக்களை ஒப்பிடுகையில் அசிங்கமானவர்கள் தென்னிந்தியர்கள்.. அவர்ர்கள் எல்லாம் பேசாமல் தரையில் உட்கார்ந்து தோசை சாப்பிட வேண்டியதுதான்.. இப்படித்தான் இருக்கிறது இந்த வட இந்தியரின் வீடியோ பதிவுகள்.

இதனால்தான் இனவெறி, நிறவெறி, மொழிவெறி கொண்டு பேசும் இந்த வட இந்திய நபர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications