சபாஷ்.. பிரம்மாதம்.. விவசாயிகள் பிரச்சனையை தத்ரூபமாக காட்சிப்படுத்திய துர்கா பூஜை பந்தல்..!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல்களில் விவசாயிகள் போராட்டம் கருவாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதுபோராட்டக்களத்தில் விவசாயிகள் படும் இன்னலை தத்ரூபமாக கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் துர்கா பூஜை பந்தல் அலங்காரங்கள் அமைந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையின் போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையமாக அதாவது கருவாக வைத்து பூஜை பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கூட தெற்கு கொல்கத்தாவில், கொரோனா லாக்டவுனால் புலம் பெயர் தொழிலாளர்கள் பட்ட துன்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த வகையில் இந்தாண்டு வடக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தல் அலங்காரத்தில், உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதியது போன்ற காட்சியும், காவல்துறை தாக்குதலால் காலணிகள் சிதறிக்கிடப்பது போன்ற காட்சியும் பூஜை நடைபெறும் இடத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் தீம் (Theme )அமைத்த துர்கா பூஜை குழு தலைவர் பிரதீக் சவுத்ரி இது தொடர்பாக கூறியதாவது, ''கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் ஓராண்டை கடந்து தொடர்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற பலர் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.''
விவசாயிகளை முன்னிலைப்படுத்தி அவர்களை கவுரப்படுத்தும் நோக்கில் இந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜை பந்தல் அலங்கரிப்புகள் நிறைவடையும் தருவாயில் உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் மோதி கொல்லப்பட்ட நிகழ்வு நடந்தது. எனினும் நாங்கள் அதையும் இதில் இணைத்து காட்சிப்படுத்தியிருக்கிறோம்'' என்றார் சவுத்ரி.

நாங்கள் விவசாயிகள்;தீவிரவாதிகள் அல்ல; உணவு உற்பத்தி செய்யும் வீரர்கள் தான் விவசாயிகள் என்ற வாசகமும் துர்கா பூஜை பந்தலில் இடம்பெற்றிருக்கிறது. விவசாயிகளை பெருமைப்படுத்தி அமைக்கப்பட்ட இந்த கருப்பொருளை அனிர்பன் தாஸ் என்ற கலைஞர் வடிவமைத்திருக்கிறார். பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு துர்கா பூஜை பந்தலை பார்வையிடத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு கொல்கத்தாவில் உள்ள டும்டும் பார்க் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு தேசியளவில் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications