2026 வரை மோடி ஆட்சி தான்... 450 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்டிராடமஸ் சொல்லிட்டாராம்!
டெல்லி: இந்தியாவில் 2014ம் ஆண்டு முதல் 2016 வரை மோடி தலைமையிலான ஆட்சி தான் நடக்கும். அப்போது உலகின் மிகப் பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என 450 ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு நாட்டு "ஜோதிடர்" நாஸ்டிராடமஸ் எழுதிய குறிப்பில் கூறப்பட்டுள்ளதாம்.
பிரெஞ்ச் நாட்டு நாஸ்டிராடமஸ். இவர் வருங்காலத்தில் உலகில் நடக்கப் போகும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கணிப்பை கடந்த 1555ம் ஆண்டு எழுதி வைத்துள்ளார்.
பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்ட அந்த குறிப்பு புத்தகத்தின் 32 மற்றும் 33 ம் பக்கங்களில் இந்தியா குறித்தும் அவர் எழுதி உள்ளாராம். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பொற்காலம்...
இந்தியாவில் அதீத ஆற்றல் கொண்ட மனிதர் ஆட்சிக்கு வருவார். அவரது ஆட்சி காலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொற்காலமாக திகழும்.

மக்களின் தலைவர்...
அவரது சனாதன தர்மத்தால் இந்தியா மிகச் சிறந்த இந்து நாடாக மாறும். துவக்கத்தில் பலரும் அவரை வெறுத்தாலும், பின்பு அவரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள்.

குளோபல் மாஸ்டர்...
அவரது தலைமையில் இந்தியா "குளோபல் மாஸ்டர்" ஆக மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் இந்தியா புகலிடமாக மாறும்" என இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி ஆட்சி...
மேலும், ஊழல் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடையும். 2014 முதல் 2026 வரை மோடி ஆட்சி நடைபெறும்.

3 தூண்கள்...
வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் பாஜகவின் 3 தூண்களாக திகழ்வார்கள். அவர்களில் மோடி, மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவராக திகழ்வார்.

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பார்...
அவரது ஆட்சியில் படிப்படியாக இந்தியாவில் மாற்றங்கள் நிகழும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான பிரச்னை, காஷ்மீர் பிரச்சினை ஆகியவற்றையும் தீர்ப்பார் எனவும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

9/11 தாக்குதல்...
ஏற்கனவே, நாஸ்டிராடமஸ் தனது கணிப்பு புத்தகத்தில் கூறிய ஹிட்லர் ஆட்சி வீழ்ச்சி அடைவது, ஒபாமா அமெரிக்காவின் அதிபர் ஆவது, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் செப்டம்பர் 11ம் தேதி இடிக்கப்பட்டது, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்து எழுதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications