இத்தனை வருசத்துல மோடி மீது 25 பைசா அளவுக்கு கூட ஊழல் குற்றச்சாட்டு கிடையாது.. பெருமைப்பட்ட அமித் ஷா!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 23 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ள நரேந்திர மோடி மீது 25 காசு அளவிற்கு கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளுக்கு நாளை நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

Not even 25 paisa size corruption charge against PM Modi says Amit shah

ஏப்ரல் 19-ல் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தல் மற்றும் ஏப்ரல் 26ல் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. நாளை நடைபெற உள்ள 3ஆம் கட்டத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதேபோல், பாஜகவும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி தனி அணியாக களம் காண்கிறது. இந்த அணியில் சிபிஐஎம், காங்கிரஸ், அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிபிஐ ஆகியவை உள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மேற்கு வங்கத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டம் துர்காபூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அமித் ஷா, "ராமர் கோயில் பிரதிஸ்டை விழாவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆனாலும் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என பயந்து அவர்கள் ராமர் கோயிலுக்கு வரவில்லை.

ஊடுருவல்காரர்களின் ஓட்டு வங்கிக்காக மம்தா பயப்படுகிறார். பாஜகவை வீழ்த்த துர்காபூரில் 15 நாட்களாக மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து வருகிறார். இங்கேயே அவர் 5 வருடங்கள் தங்கி இருந்தாலும், துர்காபூரில் மம்தா வெற்றி பெற முடியாது என சவால் விடுக்கிறேன்.

இந்தியா கூட்டணி கட்சினர் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளனர். மம்தா பானர்ஜியின் அமைச்சர் வீடுகளில் இருந்து ரூ.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி ஒருவரின் வீட்டில் இருந்து ரூ.350 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கடந்த 23 ஆண்டுகளாக நரேந்திர மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார். அவர் மீது 25 காசு அளவிற்கு கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது." எனப் பேசியுள்ளார் அமித் ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+