கதறும் குகி பெண்கள்.. 50+ சர்ச்சுகள் மீதும் அட்டாக்! மணிப்பூரில் தேவாலயங்கள் குறி வைக்கப்படுவது ஏன்
இம்பால்: மணிப்பூரில் நடந்து வரும் தொடர் கலவரத்தில் அங்கே இருக்கும் கிறிஸ்துவ சர்ச்சுகள் குறிவைக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் தாக்கப்படுவது மட்டுமின்றி சர்ச்சுகள் அங்கே தாக்கப்படுவதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற அவமானகரமான விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் வரலாறு முழுக்க பதிவாகும் அளவிற்கு மக்கள் மனதை பாதித்து உள்ளது. அதில், நடுரோட்டில் இருந்து பொட்டை காடு ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கே இந்த பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அங்கே இருக்க.. பல ஆண்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
மோதல் உச்சம்: மணிப்பூரில் மெய்ட்டி பிரிவினருக்கும் குகி மலைவாழ் மக்களுக்கும் இடையில் நடந்த மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினருக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிராக குகி பிரிவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக குகி பிரிவினர் செய்த போராட்டம் தற்போது கலவரத்தில் முடிந்துள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினர் பெரும்பாலும் ஓபிசி பிரிவில் உள்ளனர். இன்னும் சிலர் எஸ்சி பிரிவில் உள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு எஸ்டி அந்தஸ்து, இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த மார்ச் 27ம் தேதி, எஸ்டி பட்டியலில் மெய்ட்டி பிரிவை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோரிக்கையை முன் வைத்து மெய்ட்டி பிரிவை சேர்ந்த இடஒதுக்கீடு ஆர்வலர்கள் தாக்கல் செய்த பல மனுக்களை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இதை எதிர்த்து எஸ்டி பிரிவை சேர்ந்த பழங்குடி இன மக்களான குகி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதுதான் அங்கு கலவரத்திற்கு காரணமாக மாறி உள்ளது.
மெய்ட்டிக்கு உள்ள பிரச்சனைகள்: அங்கே 53% மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ளனர். அதே சமயம் குகி உள்ளிட்ட பழங்குடி சமூகங்கள் 40% மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. மணிப்பூரில் 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர் உள்ளனர். அவை பரவலாக நாகா பழங்குடியினர் (24%) மற்றும் குகி/ஜோமி பழங்குடியினர் (16%) என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
53% மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ள போதிலும் அவர்கள் நிலப்பரப்பில் வசித்து வருகிறார்கள். மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 10 சதவிகித இடங்களில் மட்டுமே அவர்கள் வசித்து வருகிறார்கள். மீதம் உள்ள பழங்குடியினர் 90 சதவிகித இடங்களில்.. பெரும்பாலும் மலைகளில் வசித்து வருகிறார்கள்.
இதில் மெய்ட்டிக்கு நில சீர்திருத்த சட்டத்தில் உரிமை இல்லை. இதனால் அவர்கள் காட்டு பகுதியில் நிலம் வாங்க முடியாது. இவர்கள் பெரும்பாலும் வைஷ்னவ இந்துக்கள். ஆனால் குகி மக்கள் சாதாரண நிலப்பரப்பில், காட்டில் என்று எங்கும் நிலம் வாங்க முடியும். குகி மக்கள் பழங்குடிகள். இவர்கள் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள், இதில் பலர் கிறிஸ்துவர்களாக மாறிவிட்டனர். சில இஸ்லாமை பின்பற்றுகின்றனர்.

கிறிஸ்துவம்: குகி பழங்குடிகளான இவர்கள் முன்பு இந்துக்களாக இருந்தவர்கள்தான். அங்கே 1894ல்தான் கிறிஸ்துவம் பரவதொடங்கியது . 1901ல் அங்கே 8 சதவிகிதம் இருந்த கிறிஸ்துவம் இப்போது 35 சதவிகிதம் ஆகி உள்ளது. 66 சதவிகிதம் இருந்த இந்து சதவிகிதம் 41 சதவிகிதம் ஆகி உள்ளது. அங்கே கிறிஸ்துவ மத மாற்றமும் குகி - மெய்ட்டி பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட காரணம் ஆகும். மெய்ட்டி பிரிவினர்தான் அங்கே சட்டசபையில் 90 சதவிகிதம் உள்ளன. அங்கே அரசின் உயர் பதவிகள் தொடங்கி ஆட்சி அதிகார மையங்களில் மெய்ட்டி மக்கள்தான் இருக்கிறார்கள்.
இதனால் மெய்ட்டி பிரிவினர் எஸ்டி ஆகும் பட்சத்தில் பழங்குடிகளான எங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று குகி என்று பிரிவினர் எதிர்த்து வருகின்றனர். அவர்கள் நிலப்பகுதியில் உள்ளனர். நாங்கள் காட்டில் உள்ளோம். எங்களுக்கே இந்த மண் சொந்தம். நாங்கள் மைனாரிட்டி. அதனால் எங்களுக்குத்தான் இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்று குகி பிரிவினர் தெரிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே பாஜக அரசு மெய்ட்டி பிரிவினருக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுக்க மும்முரமாக இருக்கிறது. மெஜாரிட்டி இவர்கள்தான், இவர்களின் ஆதரவில் எளிதாக தேர்தல்களை வெல்ல முடியும் என்பதால் பாஜக இவர்களுக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுக்க நினைக்கிறது.
புகார் என்ன - சர்ச் தாக்குதல் ஏன்?: மெய்ட்டி பிரிவினர் பலர் அங்கே குடியேறி இருக்கும் குகி பழங்குடியினர் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள். சிலர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று புகார் வைக்கின்றனர்.இதனால் என்ஆர்சி கொண்டு வர வேண்டும் என்றும் மெய்ட்டி பிரிவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது போக அங்கே பாஜக அரசு காட்டு பகுதியில் கட்டியதாக கூறி 3 தேவாலயங்களை இடிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான கிறிஸ்துவர்களான குகி மக்கள் கோபத்தில் உள்ளனர்.
இதை எதிர்த்தே அங்கே குகி பிரிவினர் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் மெய்ட்டி பிரிவினர் தாக்குதல் நடத்த.. இந்த மோதல் தற்போது கலவரமாக உருவெடுத்து உள்ளது. இதில்தான் அங்கே இருக்கும் குகி பிரிவினரின் சர்ச்சுகளை மெய்ட்டி மக்கள் குறி வைத்து தாக்கி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இதுவரை 27 சர்ச்சுகள் தாக்கப்பட்டு உள்ளன. 3 சர்ச்சுகள் வரை தீ வைக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்துவ மதம் வளர்ந்தது மற்றும் குகி மக்கள் கிறிஸ்துவர்கள் என்ற காரணங்களால் அங்கே சர்ச்சுகள் மெய்டி மக்களால் காக்கப்படுகிறது. இந்த கலவரத்தை தடுக்க அங்கே தற்போது ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications