கடத்தல் தங்கமே கடத்தல்! டெல்லி ஏர்போர்ட் பெட்டகத்தில் மேலும் 59 கிலோ தங்கம் மாயம்!!
டெல்லி: டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 59 கிலோ தங்கம் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிக பாதுகாப்பு நிறைந்த பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த அறையில் ஆய்வுக் குழுவினர் நடத்தும் திடீர் சோதனையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 83 கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்கத்தைப் போல மீண்டும் போலியான உலோகக் கட்டிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், அந்த பெட்டகத்தில் மீண்டும் சோதனை நடத்தியபோது ரூ.18.3 கோடி மதிப்பிலான சுமார் 59 கிலோ தங்கம் மீண்டும் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுங்கத்துறை கமிஷ்னர் சஞ்சய் மங்கள் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications